ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (16:09 IST)

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

visa
ஆஸ்திரேலியா அரசு திடீரென வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மாணவர்கள் விசா என்ற பெயரில் அதிக அளவு வேறு சிலரும் வருவதாக ஆஸ்திரேலியா அரசுக்கு புகார் வந்ததை அடுத்து மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த கட்டண உயர்வு இன்று முதல் அதாவது ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாகவும் ஆஸ்திரேலியா நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன்படி இதனால் வரை 710 ஆஸ்திரேலியா டாலராக இருந்த மாணவர்களுக்கான விசா கட்டணம் இன்று முதல் 1600 ஆஸ்திரேலியா டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இது இந்திய மதிப்பில் சுமார் 90 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்வையாளர்கள் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்துள்ளவர்கள் மாணவர்களுக்கான விசா விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 
Edited by Mahendran