அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் - லண்டனில் போராட்டம் !
இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எல்லோரும் போராடி வருகின்றனர்.
இந்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தின் படி, அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ,இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்குவதே ஆகும்.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் கையில் பதாகை ஏந்தி, மானவர்களின் ஒற்றுமை வெல்லுக.. போலிஸ் அராஜகம் ஒழிக என போரடினர்.
மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம் . இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.அம்பேத்கரின் அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.