செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (06:12 IST)

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டிடங்கள்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டிடங்கள்
மெக்சிகோ நாட்டில் சற்றுமுன்னர் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கல் சரிந்து விழுந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 119 பேர் பலியாகியிருப்பதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.



 
 
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 என்பதால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பொதுமக்களை காப்பாற்ற மீட்புப்படையினர்களும், மெக்சிகோ ராணுவமும் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா ஆகிய மாநிலங்கள் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த 1985ஆம் ஆண்டு இதே நாளில் மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகினர். அந்த நிகழ்ச்சிக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்த சில மணி நேரங்களில் அதே நாளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.