1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:40 IST)

40 செயற்கைக்கோள்கள் மின் காந்தப் புயலால் சேதம்: இண்டர்நெட் பாதிக்குமா?

மின் காந்த புயலால் 40 செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக இன்டர்நெட் பாதிக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விண்வெளியில் திடீரென ஏற்பட்ட மின்காந்த புயல் காரணமாக எலாம் மாஸ்க்  அவர்களுக்கு உரிமையான ஸ்டார் லிங் நிறுவனத்தின் 40 செயற்கைகோள்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக அதிவேக இணையதள சேவை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த 3ஆம் தேதி பூமிக்கு அருகில் உள்ள புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டிருந்த 49 செயற்கைக்கோள்களில் 40 செயற்கை கோள்கள் புவி மின்காந்த புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் என்றும் இவை மற்ற செயற்கைக்கோளுடன் மோத வாய்ப்பில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் சேதமடைந்த செயற்கைக்கோளின் பாகங்கள் பூமியில் விழும் என்ற வதந்தி பொய்யானது என்றும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இதனால் ஏற்படாது என்றும் ஸ்டாலின் நிறுவனம் தெரிவித்துள்ளது