1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (11:19 IST)

ஹரியின் ‘யானை’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ‘யானை’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது 
 
‘யானை’ படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இருப்பினும் ‘யானை’ திரைப்படம் முதலில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்றும் அதன் பின்னரே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டலில் ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
அருண்விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.