1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Srilankan minister said they will through train into ocean

பழைய பஸ் மட்டுமில்ல.. பழைய ரயிலையும் கடல்ல விடுவோம்! – இலங்கை அமைச்சர் பேச்சு!

World
சமீபத்தில் இலங்கை அரசு பழைய பேருந்துகளை கடலில் போட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பழைய ரயிலையும் போடுவோம் என இலங்கை அமைச்சர் பேசியுள்ளார்.

தமிழகம் – இலங்கை இடையே மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஏற்கனவே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகு, வலைகளை நாசம் செய்வதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இலங்கை அரசு பயன்படுத்திய பழைய பேருந்துகளை நடுக்கடலில் மூழ்கடித்து வருகிறது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவே அவ்வாறு செய்வதாக இலங்கை அரசு கூறுகிறது. இலங்கையில் செயலுக்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் பேசியுள்ல இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் “மீன்வளத்தை பெருக்குவதற்காக பழைய பேருந்துகள் மட்டுமல்ல, தேவைப்பட்டால் பழைய ரயில்களையும் தூக்கிப் போடுவோம்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது! – பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்!