ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (08:59 IST)

இலங்கை குண்டு வெடிப்பு - பாதுகாப்பு துறையில் அதிரடி மாற்றங்கள் !

இலங்கை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு துறையில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் என இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  தாக்குதலுக்கு இதுவரை 325 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நேற்று இலங்கையில் தேசிய துக்க தின நாள் அனுசரிக்கப்படவிருக்கிறது.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை நடத்த சிறப்புக்குழுவை அதிபர் மைத்ரிபால சிறிசேன அமைத்துள்ளார். மேலும் இண்டர்ப்போல் அமைப்பும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்டவர்கள் என இதுவரை 40 பேர் வரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்மந்தமாக உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியம் செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளது இலங்கை அரசு. இதனால் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அனைவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புத்துறை முழுவதுமாக சீரமைக்கப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாத தாக்குதல் குறித்த உளவுத்துறை அளித்த தகவல்களை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் யாருமே என்னிடம் எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.