1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2019 (16:51 IST)

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு

நேற்று ஈஸ்டர் பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்பட்ட வேளையில் இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 290 உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
இதையடுத்து இதுவரை 24 பேர் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இன்று கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு ஒன்று வெடித்தது. 
 
ஆம், கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடிப்பில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.