வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 மார்ச் 2022 (12:16 IST)

பஞ்சமோ.. பஞ்சம்! தேர்வு எழுத பேப்பர் கூட இல்ல..! – தேர்வுகளை ரத்து செய்த இலங்கை!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் பேப்பர் தட்டுப்பாடு காரணமாக பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளது.

இலங்கை அரசின் அன்னிய செலவாணி இருப்பு குறைந்ததால் ஏற்றுமதி, இறக்குமதியில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதே அரிதாகியுள்ளது. கிடைத்தாலும் விலை பல மடங்கு இருப்பதால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கையின் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், காகிதங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இலங்கை பள்ளிகளில் தேர்வுகளை ரத்து செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.