1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (18:24 IST)

சர்ச்சையில் முடிந்த மணமகள் சாதனை

இலங்கையில் நடைபெற்ற திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் மணமகளின் கின்னஸ் சாதனை ஆசை சர்ச்சையில் முடிந்துள்ளது.  


 

 
இலங்கை கண்டியில் திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் மணமகள் 3,200 மீட்டர் நீளமான புடவை கட்டி சாதனை செய்துள்ளார். ஆனால் இந்த சாதனை பெரும் சர்ச்சையில் முடிந்துள்ளது. இந்த சாதனை சர்ச்சையில் முடிய காரணம் புடவையை பள்ளி மாணவர்கள் தாங்கி பிடித்ததுதான்.
 
மணமகளின் புடவையை சுமார் 250 மாணவர்கள் பள்ளி சிரூடையில் சாலையில் தாங்கி பிடித்தனர். இது மட்டுமல்லாமல் இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இடம்பெற பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பலரும் சமூக வலைதளங்களில் இதற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் பள்ளி சீரூடையில் சாலையில் வெயிலில் புடவையை தாங்கி பிடித்து கொண்டு நின்றதே சர்ச்சைக்கு காரணம். 
 
மேலும் இதற்கு முன் இந்திய பெண் ஒருவர் 2,800 மீட்டர் புடவை அணிந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இலங்கை பெண் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.