1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (14:48 IST)

செக்ஸ் சாமியார் வங்கி கணக்கில் ரூ.75 கோடி ; ரூ.1435 கோடி மதிப்பில் சொத்து

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள சாமியார் குர்மித் சிங் ராமின் வங்கிக் கணக்கில் ரூ.75 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.


 

 
பிரபல ஆன்மீக சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரியானா மாநிலத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இவர் தேரா சச்சா சௌதா என்ற அமைப்பை நடத்தி வந்தார். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த போது அவரின் அமைப்பை சேர்ந்த பலர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களில் ஏராளமான பொது சொத்துகள் சேதமடைந்தன. எனவே, அவற்றை கணக்கிட்டு, தேரா சச்சா சவுதா அமைப்பிடமிருந்து வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, அந்த அமைப்பின் வங்கி கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
 
அதில், அந்த அமைப்பிற்கு சொந்தமான 473 கணக்குகளில் ரூ.74.96 கோடியும்,  குர்மீத் சிங்கிற்கு சொந்தமான 12 வங்கிக் கணக்குகளில் ரூ.57.72 கோடியும்  டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த கணக்குகள் அனைத்தையும் மாநில அரசு முடக்கி வைத்துள்ளது. அதேபோல், தேரா சச்சா அமைப்புக்கு சொந்தமான சிர்சாவில் மட்டும் ரூ.1,435 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.