திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (18:53 IST)

ஃபார்க்-கொலம்பிய அரசுடனான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஃபார்க் மற்றும் கொலம்பிய அரசுடனான சமாதன ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் கலந்துகொள்ள வாழும் கலையின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


 
 
இந்த சிறப்புமிக்க நிகழ்விற்கு உலகம் முழுவதில் இருந்து 15-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதில் கிழக்கில் இருந்து கலந்துகொள்ளும் ஒரே ஆன்மீக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ மட்டும் தான்.
 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் வாழும் கலை சமாதான ஹீரோக்கள் என கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மானுவல் சாண்டோஸ் ஸ்ரீ ஸ்ரீ எடுத்த முன்னெடுப்புகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
 
இந்த வரலாற்று சிறப்புமிக்க சமாதன ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி இரு தரப்பினரால் கட்டமைக்கப்பட்டது. இதற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தனது சிறப்பான பங்களிப்பை செயல்படுத்தியதற்காக தனது ஆழ்ந்த பாராட்டுக்களை கொலம்பியா வலியுறுத்தியுள்ளதாக கொலம்பிய தூதர் மோனிகா லன்செட்டா முதிஸ் கூறியுள்ளார்.
 
வாழும் கலை மன அழுத்தத்தில் இருந்து விடுபட பல மனிதாபிமான திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் நடத்தி வருகிறது.
 
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரீ ஸ்ரீ கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மானுவல் சாண்டோஸ்-ஐ பொகடாவில் சந்தித்து அனைவருக்கும் சமாதானத்தை கொடுக்க என் திறமையால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.