வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 மே 2019 (18:35 IST)

இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிரந்தர தடை - இலங்கை அதிபர் உத்தரவு

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்களில் மக்கள் பிராத்தனை செய்துகொண்டிருந்தபோது, அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. இதில் 258 க்கும் பேர் பலியாகினர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தவ்ஹீத் ஜமாத் மற்றும் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கு நிரந்தர தடை விதித்து இலங்கை அதிபர் மைத்ரே பால சிரிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார் 
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏப்ரல் 21 (ஈஸ்டர் )அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் 258பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இவ்வியக்கத்தின் தூண்டுதலின்படி இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியதாக போலீசார் பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
ஈஸ்டர் தாக்குதல் என்றழைக்கப்படும் இத்தாக்குதலுக்கு பிறகு சகஜநிலை கொஞ்சமாக திரும்பி வருகிறது. இந்நிலையில் சமூக தளங்களில் வெளியான ஒரு வீடியோவினால் சிலாபம் நகரில் இரு பிரிவனருக்கிடையே ஏற்பட்ட சண்டை கலவரமாக மாறியது. அந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
தற்போது தொடர்குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த தவ்ஹீத் ஜமாத், விலாயத் அஸ் ஜெய்லானி, ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நிரந்தர தடை உத்தரவு .பிறப்பித்துள்ளார்.