1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:09 IST)

இலங்கையில் புது அமைச்சரவை - 17 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷே முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக  மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே ஆகியோர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வருகின்றனர்.  ஆனால்  கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் 17 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 
புதிய அமைச்சர்கள் விவரம்:  
 
பொது நிர்வாக, உள்விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் - தினேஷ் குணவர்தன
 
கடற்றொழில் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா
 
கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் - ரமேஷ் பத்திரண
 
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க
 
போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் - திலும் அமுனுகம
 
நெடுஞ்சாலைகள் அமைச்சர் - கனக ஹேரத்
 
தொழில் அமைச்சர் - விதுர விக்ரமநாயக்க
 
விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் - ஜனக்க வக்கும்புர
 
வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் - ஷெஹான் சேமசிங்க
 
நீர் வழங்கல் அமைச்சர் - மொஹான் பிரியதர்ஷன டி சில்வா
 
வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் - விமலவீர திஸாநாயக்க
 
எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் - காஞ்சன விஜேசேகர
 
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - தேனுக விதானகமனே
 
ஊடகத்துறை அமைச்சர் - நாலக்க கொடஹேவா
 
சுகாதார அமைச்சர் - பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன
 
சுற்றுச்சூழல் அமைச்சர் - நஷிர் அஹமட்
 
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் - பிரமித்த பண்டார தென்னக்கோன்