1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (15:02 IST)

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிவிலக மாட்டார் - அரசு கொறடா திட்டவட்டம்!

அரசு கொறடா ஜான்ஸ்டன் ஃபெர்னான்டோ, எந்த சூழ்நிலையிலும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மாட்டார் என்று தெரிவித்துள்ளார். 

 
இலங்கையில் நாளுக்கு நாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தை மக்கள் நடத்தி வரும் நிலையில் அவசர நிலை ஏப்ரல் ஒன்றாம் தேதி பிறப்பிக்கப்பட்டது. பொது மக்களின் கொந்தளிப்பு காரணமாக தற்போது அவசர நிலையை வாபஸ் பெறப் போவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். 
 
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர். மேலும் இலங்கை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திரண்ட மக்கள் அரசுக்கு எதிராக ஆவேச கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். 
 
இந்நிலையில் இன்று இலங்கையின் கோத்தபய அரசுக்கு இருந்த பெரும்பான்மை  இழக்கப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய அரசு கொறடா ஜான்ஸ்டன் ஃபெர்னான்டோ, எந்த சூழ்நிலையிலும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மாட்டார் என்று தெரிவித்துள்ளார். 
 
பொறுப்புள்ள ஓர் அரசாக, அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எந்த சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டார். தற்போதைய தேசிய பிரச்சனைக்கு அரசு தீர்வு காணும் என நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.