1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (21:00 IST)

உளவு பார்த்ததாக ...பொது இடத்தில் 10 பேரை தூக்கிலிட்டு கொலை

சமீபகாலமாக எல்லா நாடுகளிலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இதில் தூக்குத்தண்டனையை பெரும்பாலான நாடுகள் விலக்கி விட்டன. ஆனாலும் ஒருசில நாடுகள் இந்த தண்டனையை கட்டாயமாக கடைபிடித்து வருகின்றன.
அதேபோல் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.  அந்நாட்டிலுள்ள ‘அல் ஸ்பாப்’ இயக்கத்தின் பயங்கரவாதிகள், சமீபத்தில் சுமார் 10 பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டு கொலை செய்ததாக பிரான்ஸ் நாட்டு வானொலி ஒன்று  தெரிவித்துள்ளது.
 
அதாவது கொலைசெய்யப்பட்ட இந்த  10 பேரும் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாகவும் , அவர்களை பயங்கரவாதிகள் சந்தேகப்பட்டு குற்றம் சாட்டியிருந்தனர். பின்னர் கடந்த 4 ஆம் தேதி கென்யா, சோமாலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு  முதலில் 5 பேருக்கு தூக்கு தண்டனை அளித்தனர். அடுத்தநாள் மீதம் இருந்த 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கல் வெளியாகிறது.