தங்கம் கையிருப்பில் இந்தியா சாதனை ! - 618 டன் கையிருப்பு

Last Modified செவ்வாய், 9 ஜூலை 2019 (12:49 IST)
தங்கம் கையிருப்பில் இந்தியா முதல் 10 நாடுகள் பட்டியலில் வந்து சாதனைப்படைத்துள்ளது.

உலகளவில் தங்கம் அதிகளவில் கையிருப்பில் உள்ள நாடுகளில் இந்தியா 10 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் தற்போதைய மொத்த தங்க கையிருப்பு மொத்தம் 618 டன்னாகும். இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணிக் கையிருப்பில் இது மொத்தம் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி இந்தியாவின் தங்கக் கையிருப்பு மொத்தம் 606 டன் ஆகதான் இருந்தது. இதன் மூலம் இந்தியா தங்கம் அதிகமாகக் கையிருப்பில் வைத்துள்ள நாடுகளில் இந்தியா முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளது. இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளனஇதில் மேலும் படிக்கவும் :