புதிய பூஞ்சை தொற்று பரவல்....மக்களே எச்சரிக்கை
அமெரிக்க நாட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய புதிய பூஞ்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் கொரொனா வைரஸின் 2 வது அலை பரவியது. இதையத்து கருப்பு பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மஞ்சல் பூஞ்சை, பச்சை பூஞ்சை என அடுத்தடுத்து புதிய பூஞ்சைகள் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டிசியில் உள்ள மருத்துவமனையில் உயிழப்பை ஏற்படுத்தும் புதியவகை பூஞ்சை கேண்டிடா ஆரிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பரவிவருவதாகவும், இதுவரை 101 பேருக்கு இந்தப் பூஞ்சைதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குழு அறிவித்துள்ளது. இந்த நோய்க்கான பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், குளிர் கேண்டிடா ஆரிஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.