ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (07:33 IST)

அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 5.. அட்டகாசமான புரமோ வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகிய நிலையில் அடுத்த சீசன் தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அடுத்த சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் விஜய் டிவி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளதை அடுத்து இந்த சீசன் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் நடுவர்களாக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமாக வெளியாகி உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் விஜய் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva