1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (23:22 IST)

ராணுவ வீரர் கொலை : ஈரானில் 2 பேருக்கு மரணதண்டனை!

ஈரான் நாட்டில் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாத மாஷா அமினி என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர், அவர் காவல் நிலையத்தில் மர்மான முறையில் உயிரிழந்ததால், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என நாடு முழுவதிலும் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு இஸ்ஸாமிய ஆட்சிக்கு எதிராக போராடினர். இதில்,  மர்ம நபர்கள் தீவைத்ததில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சேதம் அடைந்தன, 

இதில், கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பட்டு வருகிறது. அதன்படி, ராணுவ வீரரை கொன்றாக 2 பேருக்கு கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்த,  நிலையில், இதேயே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து,  மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.