வசமாக சிக்கிய திருடன்; அந்நியன் பட பாணியில் விசாரணை நடத்திய போலீஸ்

Snake
Last Modified செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (09:01 IST)
இந்தோனேஷியாவில் செல்போன் திருடனின் கழுத்தில் பம்பை விட்டு போலீஸார் நடத்திய விசாரணை கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
இந்தோனேஷியாவில் பப்புவா மாகாணத்தில் பலரது செல்போன்கள் காணாமல் போவது வாடிக்கையாக இருந்தது. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளி போலீஸாரிடம் சிக்கினான்.
 
இதனையடுத்து போலீஸார் அந்த குற்றவாளியின் கழுத்தில் ஒரு பெரிய பாம்பை விட்டு விசாரனை மேற்கொண்டனர். மேலும் அவனின் பேண்ட்டுக்குள் பாம்பை விட்டபடியும் விசாரணை நடத்தினர். அந்த திருடன் பயத்தில் அலறித்துடித்து அழுதவாறே தாம் செய்த குற்றங்களை வாக்குமூலமாக அளித்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு கடும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :