திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (15:40 IST)

அரசுப் பள்ளி மதிய உணவில் பாம்பு: கதிகலங்கிப் போன மாணவர்கள்

மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளி மதிய உணவில் பாம்பு இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் நான்டட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 50 குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவாக கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது.
 
அப்படி வழக்கம்போல் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க கிச்சடி தயாரிக்கப்பட்டது. ஊழியர் ஒருவர் குழந்தைகளுக்கு பரிமாற சாப்பாடு பாத்திரத்தை திறந்தபோது அதில் ஒரு பாம்பு இறந்துகிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவித்தார்.
 
இதனையறிந்த மாணவர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளானார்கள். இதுகுறித்து விசாரிக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சரியான நேரத்தில் உணவில் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.