செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2019 (14:21 IST)

யூடியூப் மூலம் மாதம் ரூ.21 கோடி சம்பாதிக்கும் 6 வயது சிறுமி!

யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் மாதம் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் அதன் பின்னணியில் குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து வருட உழைப்பு இருக்கும். அதன் பின்னர்தான் இலட்சக் கணக்கில் வருமானம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் கொரியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி போரம் என்பவர் 2 யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து அதன் மூலம் மாதம் ரூ 21 கோடி சம்பாதித்து வருவதாக செய்திகள் வந்துள்ளது. தென்கொரியாவை சேர்ந்த 6 வயது சிறுமி போரம். இவர் 2 யூடியூப் சேனல்களை ஆரம்பித்து இரண்டிலும் குழந்தைகள் பொம்மைகள் குறித்து ரிவ்யூ செய்து வருகிறார். இவருடைய இரண்டு யூடியூப் சேனல்களில் சேர்த்து மொத்தம் 31 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். இதனால் இவருக்கு மாதம் 3.1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 21 கோடி வருமானம் கிடைக்கிறது 
 
யூடியூப் சேனலின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து போரமின்  பெற்றோர்கள் தென்கொரிய தலைநகர் சியோலில் ஒரு ஐந்து மாடிக் கட்டிடத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். இந்த கட்டிடத்தின் மதிப்பு ரூபாய் 51 கோடி ஆகும். மாதம் 21 கோடி வருமானம் என்றால் சுமார் மூன்று மாத வருமானத்தில் இந்த கட்டடத்தை அவர்கள் வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தெரிந்ததிலிருந்து இன்னும் பல சப்ஸ்கிரைபர்கள் போரமின் யூடியூப் சேனலில் சப்ஸ்கிரைப் செய்து வருவதால் வரும் காலங்களில் இவருடைய வருமானம் இன்னும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது