ஹிலாரி அதிபராவாரா? முடிவை மாற்றவிருக்கும் கையெழுத்து இயக்கம்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 3 டிசம்பர் 2016 (16:33 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 25 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

 
 
அமெரிக்காவின் எலக்ட்டோரல் முறைப்படி 538 இடங்களில் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சி 306 இடங்களிலும் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக கட்சி 228 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டொனால்ட் டிரம்ப் தற்போது அதிபராக தேர்வாகியுள்ளார்.
 
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வெற்றியை திரும்ப பெற்றுக்கொண்டு வெள்ளை மாளிகைக்கு ஹிலாரி கிளிண்டனை அனுப்ப வேண்டும் என பொதுமக்களில் ஒரு பிரிவினர் கையெழுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
அதாவது, அமெரிக்க வரலாற்றில் இதுவரை இதுபோன்று அதிகளவில் கையெழுத்து போராட்டத்தில் யாரும் ஈடுப்பட்டதில்லை. இந்த கையெழுத்து போராட்டத்தை தொடங்கிய சமூக ஆர்வலரான டேனியல், ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற உள்ள வாய்ப்புகள் உள்ளதாக் தெரிவித்துள்ளார்.
 
தற்போது வரை டிரம்பிற்கு எதிராக சுமார் 50 லட்சம் பேர் வரை கையெழுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :