வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (14:59 IST)

துப்பாக்கி சூட்டில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பலி! - அதிர்ச்சியில் ஜப்பான்!

Shinzo abe
கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த முன்னாள் ஜப்பான் பிரதர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே. இவர் இன்று ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டபோது அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷின்சோவை சுட்டது கடற்படை வீரர் ஒருவர் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.