வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (08:50 IST)

மியான்மர் எல்லையில் தமிழர்கள் சுட்டுக் கொலை! – போலீஸார் குவிப்பு!

மணிப்பூர் – மியான்மர் எல்லை அருகே இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோர என்ற நகரம் மியான்மர் நாட்டிற்கு எல்லைப்பகுதி அருகே அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பல்வேறு தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியாக அங்கு வாழ்ந்த ஆட்டோ ஓட்டுனரான மோகனும், அவரது நண்பர் அய்யனாரும் மியான்மர் எல்லை அருகே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கில் வந்த இரண்டு பேர் அவர்களை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. ஆனால் பைக்கில் வந்தவர்கள் மியான்மர் ராணுவத்தை சேர்ந்தவர்களா, வேறு யாருமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. மியான்மரில் மக்களாட்சி கவிழ்ந்து ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அதன் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் எல்லைப்பகுதியில் இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மணிப்பூரில் மொரெ நகரில் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புக்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.