1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 ஜூலை 2018 (15:14 IST)

30 ஆண்டுகளாய் தூங்காத நபர்: சவுதி ராணுவத்தால் விபரீதம்!

சவுதி அரேபியா ராணுவத்தில் பணியாற்றிய நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடியும் தூங்காமல் இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
சவுதி அரேயியாவில் 70 வயது நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் தமது நிலை குறித்து பல மருத்துவர்களை அணுகியும் அவர்களால் இதுவரை உறுதியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 
 
இவர் சவுதி ராணுவத்தில் பணியாற்றிய போது 20 நாட்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்துள்ளார். அதன் பின்னர் இது பழக்கமாகிவிட்டதாம். எனவே, தனது ராணுவ சேவையை முடித்துக்கொண்ட பின்னர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார். 
 
இவருக்கு நான்கு நாடுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் பரொசோதனை நடத்தியும் இவருக்கு ஏன் தூக்கம்வரவில்லை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.