1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (09:41 IST)

பெண்களை பசுக்களாக சித்தரித்து விளம்பரம்! – சர்ச்சைக்குள்ளான பால் நிறுவனம்!

தென் கொரியாவில் பெண்களை பசுமாடுகளாக சித்தரித்து விளம்பரம் செய்த பால் நிறுவனத்திற்கு கண்டனங்கள் அதிகரித்துள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரும் பால் உற்பத்தி நிறுவனம் சியோல் மில்க். இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விளம்பரத்தில் ஒரு போட்டோகிராபர் இயற்கையான பகுதியில் புகைப்படம் எடுக்க செல்லும்போது அங்கு பெண்கள் யோகா செய்வது, நதியில் நீர் அருந்துவது போலவும், பின்னர் அவர்கள் பசு மாடுகளாக மாறிவிடுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது,

இந்த விளம்பரத்திற்கு உலக அளவில் பெண்கள் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் சியோல் மில்க் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற ட்ரெண்டிங் உருவான நிலையில் அந்நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் விளம்பரத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள நிறுவனம் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.