திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (10:04 IST)

விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் பலி! – ரசிகர்கள் அதிர்ச்சி!

லத்தீன் அமெரிக்காவின் சாண்டா டொமினிகோவில் நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் இசை மூலமாக உலகம் முழுவதும் பெரும் புகழ்பெற்றவரும் ஏராளமான ரசிகர்களை கொண்டவருமாக இருந்தவர் பிரபல லத்தீன் அமெரிக்க இசையமைப்பாளர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ். ரசிகர்களால் ஃப்ளோ லா முவி என அழைக்கப்படும் ஜோஷி தனது மனைவி குழந்தைகள் உள்ளிட்ட 9 பேருடன் சாண்டோ டொமினிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

டொமினிகோவின் இசபெல்லா விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் இசபெல்லா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அவசர தரையிறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் தீப்பற்றியபடி ஓடியது. இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.