வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (19:06 IST)

மருத்துவர் ஷூவில் ரகசிய கேமரா: ஆயிரக்கணக்கான பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்..

shoe
மருத்துவர் ஷூவில் ரகசிய கேமரா: ஆயிரக்கணக்கான பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்..
மருத்துவர் ஒருவர்  தனது ஷூவில் ரகசிய கேமரா பொருத்தி ஆயிரக்கணக்கான பெண்களின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்து  வைத்து இருந்த நிலையில் அந்த வீடியோக்கள் அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சிங்கப்பூரை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தார். பெண்கள் தன்னிடம் சிகிச்சைக்கு வரும்போது அவர் தனது ஷூவில் உள்ள ரகசிய கேமராக்கள் மூலம் பெண்களின் அந்தரங்க பாகங்களை வீடியோ பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது
 
இதனை அடுத்து அவரது ஷூவை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஷூவில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பெண்கள் அதிகம் கூடும் மால்கள் கல்லூரிகள் ரயில்கள் ஆகிய இடங்களில் சென்றபோது அவர் வீடியோவை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பாக குட்டைப்பாவாடை போடும் பெண்களை குறிவைத்து அவர் அந்தரங்க வீடியோவை எடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது 
 
அதுமட்டுமின்றி தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்களிடமும் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவரது லைசென்சை ரத்து செய்த சிங்கப்பூர் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.