செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (19:47 IST)

ஒரே பெயரில் உள்ள 178 பேர்: ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை!

ஒரே பெயரில் உள்ள 178 பேர்: ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை!
ஒரே பெயரில் உள்ள 178 பேர் ஒரே இடத்தில் கூடிய கின்னஸ் சாதனை செய்துள்ளனர்.  ஒரே பெயரில் உலகம் முழுவதும் பலர் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் ஒரே பெயரில் உள்ள 178 பேர் முதல் முறையாக ஒரே இடத்தில் கூடி அதை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
ஜப்பான் நாட்டில் ஹிரோகாசு டனாகா என்ற பெயரையுடைய 178 பேர் நேற்று ஒரே இடத்தில் சந்தித்தனர். இந்த 178 பேரும் ஒரே இடத்தில் குழுமி இதை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளது 
 
இதற்கு முன் 164 பேர் ஒரே பெயரில் ஒரே இடத்தில் கூடியது உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை தற்போது ஜப்பானில் சேர்ந்தவர்கள் முறியடித்துள்ளனர் 
 
இந்த கூட்டத்தில் குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒரே பெயரில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva