வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (23:40 IST)

கால்பந்து போட்டியை பார்க்க வரும் வெளிநாட்டவர்களுடன் உடலுறவு வேண்டாம்: ரஷ்ய எம்பி எச்சரிக்கை

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களுடன் உடலுறவு வைத்து கொள்ள வேண்டாம் என ரஷ்ய பெண்களுக்கு அந்நாட்டு எம்பி ஒருவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
 
ஒலிம்பிக் உள்பட சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கும். அந்த வகையில் இன்று முதல் ரஷ்யாவில் தொடங்கியுள்ள கால்பந்து போட்டியை கண்டு ரசிக்க அந்நாட்டிற்கு வந்துள்ள லட்சக்கணக்கான வெளிநாட்டு பார்வையாளர்களை திருப்திப்படுத்த ரஷ்யாவில் உள்ள பாலியல் தொழிலாளிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.
 
இந்த நிலையில் ரஷ்யா எம்.பி டமாரா பிலெட்னியோவா என்பவர், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க வரும் வெளிநாட்டவர்களுடன், ரஷ்ய பெண்கள் யாரும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளார். கடந்த 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, அந்த போட்டியை காண வந்த வெளிநாட்டு பார்வையாளர்களுடன் ரஷ்ய பெண்கள் பலர் உடலுறவு வைத்துக் கொண்டதால் பல பெண்களுக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்பட பல நாடுகளின் கலப்பில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன என்பதாலே ரஷ்ய எம்பி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.