ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:23 IST)

ஜோ பைடன் உக்ரைன் விசிட் எதிரொலி: அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ரஷ்யா!

russia
அமெரிக்க அதிபர் ஜோபைடன் சமீபத்தில் உக்ரைன்  நாட்டிற்கு சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்தார் என்று செய்திகள் வெளியானது. அது மட்டும் இன்றி உக்ரைன்  நாட்டிற்கு ஏராளமான ஆயுதங்களையும் அமெரிக்கா அதிபர் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 
 
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நடந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 
 
ஸ்டார்ட் எண்ணம் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா ரஷ்யா இடையே அணு ஆயுதங்களை குறைக்க வழி வகுக்கும் ஒப்பந்தமாகும். அமெரிக்க அதிபர் ஜோபைடனின் உக்ரைன்   பயணத்தை அடுத்து அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran