மருத்துவரை கைகுலுக்கியதால் தம்மை தாமே தனிமைப்படுத்தி கொண்ட புதின்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் நிற்க கூடாது என்றும் அவர்களுடன் கை கொடுக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளை சமீபத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் புதின், அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர் ஒருவரை சந்தித்து ஆலோசனை செய்தார். அதன் பின் அவரிடம் கைகுலுக்கி கொண்டு கிளம்பினார்
இந்த நிலையில் புதின் கைகுலுக்கி டாக்டருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிபர் புதின் தனக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று கருதி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் ரஷ்ய டாக்டர்கள் புதினின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை க்கு அனுப்பி உள்ளனர். சோதனையின் முடிவு வெளிவந்தால் மட்டுமே அதிபர் புதினுக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதும் தெரியும். இருப்பினும் அவர் தனிமைப்படுத்தும் காலமான 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தி கொள்ள முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஏற்கனவே ஈரான் துணை அதிபர், இங்கிலாந்து பிரதமர் உள்பட பல ஆட்சியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புதின் அவர்களுக்கும் கொரோனா தாக்கப்பட்டு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது