1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (15:43 IST)

ஒலியை விட இருமடங்கு வேகம்; ரஷ்யாவின் புதிய போர் விமானம்!

ஒலியை விட இருமடங்கு வேகம்; ரஷ்யாவின் புதிய போர் விமானம்!
ஒலியை விட இரு மடங்கு வேகமாக பயணிக்க கூடிய அதிநவீன புதிய போர் விமானத்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

முதன்முறையாக ரஷ்யா தனது அதிநவீன போர்விமானத்தை உலகின் முன் அறிமுகப்படுத்தியுள்ளது. சுகோய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை அதிநவீன போர் விமானமான இதற்கு செக்மேட் என பெயரிடப்பட்டுள்ளது.

குறைந்த எடைக் கொண்ட இந்த விமானம் அனைத்து தட்பவெட்ப நிலைகளிலும் ஆற்றலுடன் பயணித்து சண்டையிட வல்லது என கூறப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு முதலாக இந்த விமான ரஷ்ய விமானப்படையில் இடம்பெறும் என்றும், 2026ம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த விமானத்தை விற்பனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.