திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (14:00 IST)

உக்ரைனின் அணுமின் நிலையத்தை பிடித்த ரஷ்யா! – எச்சரிக்கும் உக்ரைன்!

உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா அங்குள்ள அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் நகரங்களில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ரஷ்ய ராணுவத்தை உள்ளே வர விடாமல் எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது உக்ரைனின் சபோரிஸ்ஸியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளதால் அணு ஆயுதம் உள்ளிட்ட அபாயகரமான தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்றும், அல்லது அணுமின் நிலையத்தை தாக்கினால் ஏற்படும் கதிர்வீச்சு ஐரோப்பாவையே பாதிக்கும் என்றும் உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. அணு உலைகளை ரஷ்யா கைப்பற்றி வருவது உலக நாடுகள் இடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.