வியாழன், 31 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2020 (09:24 IST)

நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா? – ட்ரம்ப் விளக்கம்!

நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விரைவில் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

இரண்டாம் உலக போருக்கு பிறகு உலகளாவிய பாதுகாப்பிற்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 29 நாடுகள் இணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின. ராணுவரீதியாக இணைந்து செயல்படும் இந்த அமைப்பு வியட்நாம், ஈரான் யுத்தங்களில் மிகப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நேட்டோ நாடுகள் தங்கள் பங்குகளை சரிவர நிர்வகிப்பதில்லை என்பதால் அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக தான் எழுதிய புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் “நேச நாடுகள் அமைப்பில் ஒவ்வொரு நாடும் 2 சதவீதம்தான் தங்களது பங்குகளை அளிக்கின்றன. இது மிகவும் குறைவான விகிதம். சில நாடுகள் அதையும் செலுத்துவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்கா நேட்டோ படையில் தனது பங்களிப்பை குறைத்து கொள்ளும். ஆனால் முழுமையாக வெளியேற அமெரிக்கா திட்டமிடவில்லை” என்று கூறியுள்ளார்.