1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (15:06 IST)

செல்போன் பேசியே வருடத்திற்கு ரூ.4 கோடி சம்பாதிக்கும் இளம்பெண்!

lilly
செல்போன் பேசியே வருடத்திற்கு ரூ.4 கோடி சம்பாதிக்கும் இளம்பெண்!
செல்போனில் பேச பேச செலவுதான் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் செல்போனில் பேசியே வருடத்திற்கு நான்கு கோடி ரூபாய் இளம்பெண் ஒருவர் சம்பாதிக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
செல்போன் மூலம் முகம் தெரியாத நபர்களிடம் பேசுவதற்காக இளம்பெண் ஒருவர் கட்டணம் பெற்று வருகிறார். இதன் மூலம் அவர் வருடத்திற்கு நான்கு கோடி வரை சம்பாதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பிரான்ஸ் நாட்டை  லில்லி என்ற இளம்பெண் பிரஞ்சு மொழியை மிகவும் அழகாகவும் அருமையாகவும் பேசுவதால் அவரிடம் பல ஆண்கள் செல்போன் மூலம் பேசி வருகின்றனர்
 
அவர் தன்னிடம் செல்போன் மூலம் பேசும் நபர்களிடம் கட்டணம் பெறுகிறார். இந்த கட்டணம் தான் அவருக்கு வருடத்திற்கு நான்கு கோடி ரூபாய் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது
 
செல்போன் பேசியே வருடத்துக்கு 4 கோடி ரூபாய் சம்பாதிக்கும் இளம்பெண் கொடுத்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva