வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 16 மே 2020 (19:59 IST)

ரூ.227 லட்சம் கோடி கொரோனா நிவாரண தொகை … மசோதா நிறைவேற்றம்

சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்து 47 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2லட்சத்து 60 அயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  88,237 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் 227 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணத் திட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்காக காணொளி முறையில், இணையதளம் வாயிலாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 48 உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்தும், 199 உறுப்பினர்க்ள் எதிர்த்தும் வாக்களித்தனர்.  எனவே இந்த நிவாரணத் தொகை என்பது அனைத்து தரப்பினருக்கு உபயோகப்படக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசுகளுக்கு ரூ. 38 லட்ச
ம் கோடி அளிக்கவும், மக்களுக்கும் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.