திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 அக்டோபர் 2025 (12:02 IST)

பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்ட முதியவர்.. 171 நாட்கள் உயிர் வாழ்ந்து மரணம்..!

பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்ட முதியவர்.. 171 நாட்கள் உயிர் வாழ்ந்து மரணம்..!
உலகிலேயே முதல்முறையாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்ட ஒரு முதியவர் 171 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார். உறுப்பு மாற்று மருத்துவத்தில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
 
சீனாவில் உள்ள அன்ஹுய் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில், 71 வயதான ஒரு முதியவருக்கு மனித கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமற்ற நிலையில், 2024 மே மாதம் 11 மாதப் பன்றியின் கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
 
மருத்துவர்களின் கூற்றுப்படி, பன்றியின் கல்லீரல் மிக சிறப்பாக செயல்பட்டது. அதன் உதவியால் அவர் 38 நாட்கள் உயிர் வாழ்ந்தார். பின்னர், அவரது சொந்த கல்லீரல் செயல்பட தொடங்கியதால், பன்றியின் கல்லீரல் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒட்டுமொத்தமாக அந்த நோயாளி 171 நாள்கள் உயிர் வாழ்ந்த நிலையில், இரைப்பைக் குடல் இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார்.
 
பல்வேறு சிக்கலான செயல்பாடுகளை கொண்ட கல்லீரல் உறுப்பு, மனித உடலில் நீடித்திருப்பது, பன்றியின் உறுப்புகள் மனிதர்களுக்கு பொருத்தமாக இருக்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. உறுப்பு தான பற்றாக்குறைக்கு இந்ச் சிகிச்சை முறை எதிர்காலத்தில் தீர்வாக அமையும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran