1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (13:32 IST)

என்னுள் மாற்றம் ஏற்படுத்திய புத்தகங்கள்! – பில் கேட்ஸ் பரிந்துரைத்த இந்தியரின் புத்தகம்!!

Bill Gates
இந்த ஆண்டில் தான் படித்த சிறந்த புத்தகங்கள் குறித்து பரிந்துரைத்துள்ள உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் அதில் ஒரு இந்தியரின் புத்தகத்தையும் பரிந்துரைத்துள்ளார்.



பிரபலமான கோடீஸ்வரர்கள், பிரபலங்கள், ஆளுமைகள் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தான் படித்த சிறந்த புத்தகங்கள், நல்ல படங்களை தன்னை பின்தொடர்பவர்களுக்கு பரிந்துரைப்பது மேலை நாடுகளில் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக பிக்பாஸ் தொடர் மூலம் இதுபோல தான் படித்த புத்தகங்களை மக்களிடம் பரிந்துரைத்து வருகிறார்.

அதுபோல மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலக கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் இந்த ஆண்டில் தான் படித்த புத்தகங்களில் முக்கியமான சில புத்தகங்களை பரிந்துரைத்துள்ளார். அந்த புத்தகங்களின் விவரங்கள்:
 
  • The song of the Cell – Siddartha Mukherjee
  • Not the end of the world – Hanna Ritchie
  • Invention and Innovation – Vaclav Smil
  • All the light we cannot see – Anthony Doerr
 
இந்த புத்தகங்களில் இறுதியாக உள்ள All the light we cannot see ஒரு நாவல். இரண்டாம் உலக போரை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்த நாவல் வெப் சிரிஸாகவும் இதே பெயரில் வெளியாகியுள்ளது. அதுபோல முதலில் குறிப்பிடப்பட்டுள்ள The song of the Cell என்ற புத்தகம் செல்களின் வளர்ச்சி குறித்து அமெரிக்க – இந்திய பயாலஜிஸ்ட் சித்தார் முகர்ஜி எழுதியது. சித்தார்த் முகர்ஜி அறிவியல் சார்ந்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது A Biography of Cancer என்ற புத்தகம் 2011ம் ஆண்டின் இலக்கியம் மற்றும் பத்திரிக்கை துறையின் உயரிய விருதான புலிட்சர் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.