செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 நவம்பர் 2018 (09:11 IST)

திடீரென கட்சி மாறிய ராஜபக்சே: அதிர்ச்சியில் அதிபர் சிறிசேனா

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு தன்னுடைய கட்சியில் புதியதாக சேர்ந்த மஹிந்தா ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா சில நாட்களுக்கு முன் நியமனம் செய்தார். ஆனால் ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் திடீரென பாராளுமன்றத்தை கலைத்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்சேவும் அவருடைய மகன் நமல் ராஜபக்சேவும் விலகி இலங்கை பொதுஜன முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா) கட்சியில் இணைந்தனர். இவர்கள் இருவருடன் மேலும் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் 50 பேர் இந்த கட்சியில் இணைந்துள்ளனர்.

வரும் ஜனவரியில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவே ராஜபக்சே இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது.