வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:34 IST)

டொனால்டு ட்ரம்பின் பங்களாவில் FBI அதிகாரிகள் சோதனை: வெள்ளை மாளிகை ஆவணங்கள் சிக்கியதா?

Donald
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுடைய வீட்டில் FBI அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவர் பதவியில் இருந்து விலகும் முன்னர் வெள்ளை மாளிகையில் உள்ள பல்வேறு ஆவணங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது
 
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் FBI அதிகாரிகள் இன்று திடீரென மாளிகையில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருவதாகவும் இதுவரை எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
அதிபர் பதவியில் இருந்து விலகிய போது வெள்ளை மாளிகையில் இருந்து ஏராளமான ஆவணங்களை டொனால்ட் டிரம்ப் அள்ளி சென்றாரா என்பது குறித்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்