காணாமல் போன இளைஞரை சடலமாய் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடித்த துயரம்!!
இந்தோனேஷியாவில் காணாமல் போன இளைஞர் ஒருவர் மலைப் பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த அக்பர் சலுபிரோ தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். பணிக்குச் சென்ற அவர் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரைத் தேடி அலைந்துள்ளனர்.
இந்நிலையில், அக்பரின் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில், பெரிய மலைப் பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் அந்த பாம்பின் வயிற்றை கிழித்தபோது, அதில் காணாமல் போன அக்பர், சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.