வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (22:46 IST)

சூடானில் மால்கள், கடைகளில் போராட்டக்காரர்கள் கொள்ளை

Sudan
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளதை அடுத்து  கடந்த 1 ஆம் தேதி முதல்  கடும் மோதல் நிலவி வருகிறது.

அந்த நாட்டிலுள்ள  இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் சூடான் நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறும் வரை இருதரப்பினரும் 3 நாட்கள் போர் நிறுத்தம் செய்துள்ளனர்.

இந்த நிலையில்,  கடந்த 2 நாட்களில் டார்மர் என்ற பகுதியில் நடைபெற்ற மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  ஜெனனா நகர முக்கிய சந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 10 நாட்களில் நடைபெற்ற மோதலில் இதுவரை   559 பேர் பலியாகியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அங்குள்ள கடைகள், மால்கள், வணிக வளாகங்களில்  போராட்டக்காரர்கள் பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.