திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (09:46 IST)

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி தகவல்..!

இந்தியா பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் முதலீட்டாளர்கள் அவ்வப்போது நஷ்டத்தையும் லாபத்தையும் மாறி மாறி சந்தித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்தது என்பதும் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் அதிகரித்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி நேற்றைய நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று மதியத்திற்கு பிறகு பங்குச்சந்தை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை பொறுத்திருந்து காண்பிக்க வேண்டும். 
 
சற்று முன் வரை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 60,045 என்ற புள்ளிகளிலும் நிஃப்டி 17,742 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva