வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:22 IST)

அமெரிக்கா சென்ற நிதியமைச்சருக்கு எதிராக போராட்டம்!

Ishaq Dar
அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் நிதியமைச்சருக்கு எதிரான சிலர் குரல் கொடுத்தனர். இதுகுறித்த வீடியோ வைர்லாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷரீப்  தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், இவர் தலைமையிலான அமைச்சரவையில் புதிய நிதியமைச்சராக சமீபத்தில் பொறுப்பு  ஏற்றவர்  இஷாக் தார்.

இவர் சர்வதேச  நாணய நிதியத்தின் வருடாந்திய கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் விமான நிலையத்தில் இறங்கிய அவர்  பிற அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, இஷாக் தாருக்கு எதிராகச் சிலர் குரல் எழுப்பினர்.

இதனால் கோபம் அடைந்த சிஷார் அவர்களிடம் சென்று முறையிட்டார். இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது.

Edited by Sinoj