உலகின் இரண்டாம் அழகியான பிரியங்கா சோப்ரா - ஹாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளினார்


Murugan| Last Updated: திங்கள், 3 ஏப்ரல் 2017 (19:14 IST)
உலகின் இரண்டாம் அழகியாக பாலிவுட் நடிகையாக பிரியங்க சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சில பாலிவுட் பிரபலங்களை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

 

 
பாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் பிரியங்கா சோப்ரா. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட்டிற்கு சென்றார். அங்கு மிகவும் பிரபலமான ‘குவாண்டியோ’ எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து, ஹாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கார் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். 
 
அமெரிக்காவின் பிரபல பஸ்நெட் இனையதளம் சமீபத்தில் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பிரியங்கா சோப்ரா 2ம் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் பாப் பாடகியும், நடிகையுமான பியான்ஸ் முதலிடத்தை தட்டிச் சென்றார். 
 
ஹாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஏஞ்சலினா ஜோலி, ஏம்மா வாட்சன் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரியங்க சோப்ரா 2ம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :