’சர்வாதிகாரம்’ - கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுக் கொல்ல அதிபர் உத்தரவு
ஐ.நா வின் பொருளாதார தடையையும் மீறி ஏவுகணை சோதனை மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருபவர் வடகொரியா அதிபர் கிம் ஜோங்.
சில தினங்களுக்கு முன் இவர், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வடகொரிய வீரர்களை அந்நாட்டு நிலக்கரி சுரங்கத்திற்கு வேலையில் அமர்த்த உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இவர் பங்கேற்ற ஒரு ஆலோசனை கூட்டத்தில், அந்நாட்டு கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தூங்கிவிட்டார். அவரை சுட்டுக் கொல்ல கிம் ஜோங் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு அதிகாரிகளை நாடு கடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.