1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (07:18 IST)

புதுவையில் திடீர் திருப்பம்: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா வேட்பாளரா?

புதுவை பாராளுமன்ற தொகுதியை என்ஆர் காங்கிரஸ், பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்ட நிலையில் பாஜக வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

புதுவையை பொருத்தவரை தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் இது குறித்து பாஜக மேலிடம் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஒரு வேட்பாளரை பாஜகவுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. அவர்தான் புதுவையில் இருந்து கோவாவுக்கு மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்லவன். ஆனால் அவரை வேட்பாளராக நிறுத்த பாஜக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர பிரியங்கா என்பவரை வேட்பாளராக நிறுத்தலாம் என ரங்கசாமி கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்  என்று பாஜக மேலிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

எனவே புதுவையை பொருத்தவரை தமிழிசை அல்லது சந்திர பிரியங்கா ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva